உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

காலி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றுடன் உந்துருளி மோதி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காலி – கிந்தோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இரத்கம, பிந்தாலிய சந்தியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் சிக்கிய தனது நண்பர்கள் இருவரைப் பார்ப்பதற்காகக் காலி போதனா வைத்தியசாலைக்கு உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இரத்கம பகுதியில் இடம்பெற்ற அந்த முந்தைய விபத்திலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் கிந்தோட்டை மற்றும் தத்தல்ல பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது காலி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நண்பனின் விபத்துச் செய்தி கேட்டு விரைந்தவர்கள், அதே வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

3 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0