உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

13 ஆவது திருத்தம் பேசப்படவில்லையா? – இந்தியா மௌனம் கலைக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இந்திய விஜயத்தின் போது 13 ஆவது திருத்தம் அல்லது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்படவில்லை என ஜே.வி.பி. கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது எனத் தெரியவில்லை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜே.வி.பியினரின் கூற்றுக்கு மறுப்பு
அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துரைத்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இக்கூற்றுத் தொடர்பில் தனது சந்தேகத்தை வெளியிட்டார்.

இந்தியாவின் நிலைப்பாடு
“இலங்கை அரசின் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளின்போது, இந்தியா இவ்விடயங்கள் குறித்து அழுத்தமாகவோ அல்லது மேலோட்டமாகவோ தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இவ்வாறான பின்னணியில், இம்முறை இது பற்றிப் பேசப்படவில்லை என ரில்வின் சில்வா கூறுவது எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இது தொடர்பில் இந்தியாவே தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைத் தேர்தல்
இந்தியாவின் அழுத்தங்களுக்கு அப்பால், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான பொறுப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0