உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கம்பஹா – தனோவிட்ட பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞர் உடனடியாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த பெண் பயணி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தனோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

9 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0