உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ராஜபக்ஷக்களைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? – சட்டத்தின் முன் அனைவரும் சமமே.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“கடந்த காலங்களில் நாட்டைச் சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதை ‘அரசியல் பழிவாங்கல்’ எனக் கூறி ரோஹித அபேகுணவர்தன போன்ற ராஜபக்ஷ அணியினர் தப்பிக்க முடியாது.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

அநுர அரசு ராஜபக்ஷக்களையும், அவர்களின் சகாக்களையும் சிறையில் அடைப்பதிலேயே குறியாக உள்ளது என ரோஹித அபேகுணவர்தன எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஊடகங்களிடம் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில்,
“ராஜபக்ஷக்களையும் அவர்களின் சகாக்களையும் பற்றிச் சிந்திப்பதற்கு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அவர்கள் இப்போது ஓர் அரசியல் சக்தியே கிடையாது. ஆனால், தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் சொத்தைத் திருடியவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு. அதைச் செய்யும் போது திருடர்களுக்குப் பயம் வருவது இயல்பானதுதான். அதைத்தான் இவர்கள் ‘பழிவாங்கல்’ என்று கூச்சலிடுகின்றார்கள்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பற்றிப் பேச ரோஹிதவுக்கு எந்த அருகதையும் இல்லை. இவர்களது ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகள் உரமில்லாமலும், மீனவர்கள் எரிபொருள் இல்லாமலும், மக்கள் வரிச்சுமையாலும் வீதிக்கு வந்தார்கள். அந்தப் பாவங்களைச் சரி செய்யவே நாம் இன்று பாடுபடுகின்றோம். ராஜபக்ஷ அணியைப் பாதுகாப்பது எமது பணியல்ல, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே எமது பணி.

குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் கடமையாகும். முறையான விசாரணைகளின்றி யாரையும் சிறையில் அடைக்க மாட்டோம். ஆனால், ஆதாரங்களுடன் சிக்கியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதில் இந்த அரசு பின்வாங்காது.” – என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

27 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0