உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜனநாயகத்தை முடக்கியவர்களுக்கு தேர்தல் பற்றிப் பேச அருகதை இல்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் நீண்டகாலமாகத் தடுத்து நிறுத்தியவர்களே இன்று தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையானது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களில் ஒருவரான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசின் மக்கள் செல்வாக்கைப் பரிசோதிக்கத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்
“கடந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டு, ஜனநாயகத்தை முடக்கியவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ரோஹித அபேகுணவர்தன போன்றவர்கள் அன்று அதிகாரத்தில் இருந்தபோது தேர்தலைப் பற்றிப் பேசவில்லை. இன்று தமக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள முற்படுவது நகைப்புக்குரியது.

அரசு தற்போது கடந்த கால ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட சீரழிவுகளையும், பொருளாதாரக் குழப்பங்களையும் சரிசெய்து கொண்டிருக்கின்றது. தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. உரிய நடைமுறைகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும். அப்போது மக்கள் யாருக்குப் பாடம் புகட்டுவார்கள் என்பதை ரோஹித போன்றவர்கள் நேரில் பார்ப்பார்கள்.” – என்று அவர் காரசாரமாகப் பதிலளித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தேர்தல்களின் போது நிரூபிக்கப்படும் என்றும், இவ்வாறான ‘வாய்ச்சவடால்களுக்கு’ அஞ்சப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

8 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0