T20 உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட உத்தரவு.!
எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த T20 உலகக்கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி புறக்கணிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு தற்போது அந்த முடிவை ரத்து செய்து, அணி திட்டமிட்டபடி விளையாடும் முடிவை எடுத்து உள்ளது.பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றுக்கிடையில் உயர்மட்ட ஆலோசனைகள் நடந்தன. பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, பிரதமர் இந்த முடிவை எடுத்தார்.
மேலும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவை நினைவுகூர்ந்தார். அதேபோல், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் அமினுல் இஸ்லாம் விடுத்த கோரிக்கையும் பாகிஸ்தான் அரசு கவனத்தில் எடுத்துள்ளது.இதன் படி, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி “Men in Green” இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட, கிரிக்கெட் மாண்பையும் தொடர்ச்சியையும் பாதுகாக்கும். பிரதமர் அணி வீரர்களுக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் களமிறங்கும் வீரர்கள் தேசப் பெருமையுடன் விளையாடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.