நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையின் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஷ இன்று (23) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
வழக்கு விசாரணையின் போது, அவரை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.