உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

விளையாட்டுச் செய்திகள் 4 மணி நேரம் முன்
12 பார்வைகள்

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்த இலங்கை அணி, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் வில் ஜேக்ஸின் சுழலில் சிக்கி 37 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் ஹரி புரூக் அதிரடியாக விளையாடி 7 நான்கு ஓட்டங்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜோ ரூட் 5 நான்கு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும், வில் ஜேக்ஸ் 5 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் அறிமுக வீரராகக் களமிறங்கிய சசிந்து கொலம்பகே 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினர். மேலும் டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு துனித் வெல்லாலகே 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 45 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 4 நான்கு ஓட்டங்களுடன் 42 ஓட்டங்களையும் பெற்ற போதிலும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய வில் ஜேக்ஸ் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

34 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

13 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

32 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியானது செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் (Chester-le-Street) மைதானத்தில்…

31 0 0