உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பழிவாங்கல் காரணமாக ஊதியம் இடைநிறுத்தம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 38 நிமிடங்கள் முன்
22 பார்வைகள்

யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர், பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக முறையான முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனது ஊதியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமாரட்சியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்பித்த மேற்படி ஆசிரியருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆசிரியர் உரிய காரணங்கள் இன்றி ஏற்கனவே இடைமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியிருந்தார். இந்த முறைப்பாட்டின் மீது இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் அந்த ஆசிரியரின் இடமாற்றம் நிறுத்தப்பட்டு முன்னைய பாடசாலையில் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது உள்வரும், வெளிச்செல்லும் நேரங்கள் தொடர்பான கையொப்பங்கள் தொடர்பில் சில குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஆரம்ப விசாரணைக்காக தற்காலிக அடிப்படையில் அந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு, இன்னொரு பாடசாலைக்கு தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டுள்ளார். எனினும், நிரந்தர சேவையில் உள்ள பாடசாலையூடாகவே ஊதியம் பெறுமாறு அவருக்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரால் எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறான வேதனப்பட்டியலில் கையொப்பம் வைப்பதற்காக நிரந்தர சேவையில் உள்ள பாடசாலைக்குச் சென்றபோது அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், செப்டெம்பர் மாத ஊதியம் அவருக்கு வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்தே, அந்த ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இருதய அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட மேற்படி ஆசிரியர், தன்னால் நீண்டதூரம் பயணிக்க முடியாத நிலையிலும், அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர் என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து நீதி அமைச்சருடன் சுவிஸ் பதில் தூதுவர் பேச்சு.!

நீண்டகாலமாகப் பதில்களுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நகர்வுகள் தொடர்பிலும்…

71 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு; குற்றவாளிகள் கடுங்காவல் சிறையில் அடைப்பு.!

ஈஸ்டர் படுகொலை வழக்கு தொடர்பான முக்கிய தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாலை 2.00…

17 0 0
இலங்கை செய்திகள்

சிறுமிகளை ஏமாற்றி துஷ் – பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி சிக்கினார்.!

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்தை அழிக்கும் அரசியல் சூழ்ச்சி.!

அரசமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…

16 0 0