உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

உலக செய்திகள் 48 நிமிடங்கள் முன்
76 பார்வைகள்

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஈரானிய தூதுக்குழுவிற்கு, அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இந்த விவகாரத்தை இராஜதந்திர முறையில் தீர்க்க விரும்புவதை உத்தியோகபூர்வமாக அறிவித்து, அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

எனினும், நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் போது ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகள் ஏற்கனவே மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், நியூயோர்க்கில் உள்ள தூதுக்குழுவினர் மேலதிக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.

முன்னதாக, பிராந்திய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க ஆயத்தமாவதாக ஈரானிய இராணுவ மையம் எச்சரித்திருந்ததுடன், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் எல்லையற்ற வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாயின், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

2 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0