விளையாட்டிற்கு வயது முக்கியமல்ல – தோனி தெரிவிப்பு.!
விளையாடுவதற்கு வயது ஒரு விடயமல்லவென இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் 2027 ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் விளையாடலாமா? என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வேதச ரி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.கிரிக்கெட் வீரர்களை பொறுத்த வரையில் உடல்தகுதியும், வலுவான திறமையும்தான் முக்கியம்.
ஒருவருக்கு 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டது என்பதற்காக அவர் விளையாட தகுதி அற்றவராகி விடமாட்டார்.பெரிய போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது அவசியம் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.