உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மனித பாவனைக்கு உதவாத மீன்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மூதூரில் 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதர்கள் அடங்கிய குழுவினரால் இன்று (05) இடத்தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனித பாவனைக்கு உதவாத, மனித சுகாதாரத்திற்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய புழுக்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இருந்த கருவாடு தயாரிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்ட சுமார் 1500 கிலோ கிராம் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு தரமற்ற மீன்களை சேமித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மீன்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பொதுச் சுகாதாரத்திற்கு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு, அவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித பாவனைக்கான உணவுப் பொருட்களை வாங்கும் போது அதன் தரம், சுகாதார நிலை மற்றும் சேமிப்பு முறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0