உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதன் விளைவு தொடர்பில் பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை.!

47 பார்வைகள்

டி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு கவலை மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.), இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கிண்ணத்தில் ஆட அனுமதிப்பதாகவும் ஆனால் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் குறிப்பிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் ஐ.சி.சி. இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘அனைத்து பங்குதாரர்களின் நலனையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்றுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தில் பொருளாதார ரீதியில் லாபகரமான போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பார்க்கப்படுகிறது. ‘உலகளாவிய கிரிக்கெட் அமைப்பில் ஓர் உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் நிலையில், இது தனது நாட்டின் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அந்த விளைவுகள் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறது’ என்றும் ஐ.சி.சி. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இருந்து அறிவிப்பு கிடைக்கவில்லை என்றும் ஐ.சி.சி. சுட்டிக்காட்டியுள்ளது. அந்த சபையின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்தியா வர மறுத்த பங்களாதேஷ் அணி டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடக்கம் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வந்தது. ஐ.சி.சியின் முடிவை சாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்பதிலும் சந்தேகத்தை வெளியிட்டு வந்தார். இது தொடர்பில் பாகிஸ்தான் அரசே இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.டி20 உலகக் கிண்ணத்தில் சி குழுவில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையிலேயே ஆடவுள்ளது.

உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் பெப்ரவரி 7 ஆம் திகதி நெதர்லாந்தை எதிர்கொள்ளம் பாகிஸ்தான் பெப்ரவரி 10 ஆம் திகதி அமெரிக்காவுடனும் 18 ஆம் திகதி நமீபியாவையும் எதிர்கொள்ளும். இதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பட்சத்தில் அந்தப் போட்டிக்கான புள்ளிகளை இழக்க நேரிடும். அதேபோன்று ஐ.சி.சி. போட்டி நிபந்தனைகளின்படி பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டிலும் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.எனினும் இந்த விடயம் தொடர்பில் ஐ.சி.சி. இன்னும் இறுதி முடிவு ஒன்றை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0