உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இளையோர் உலகக் கிண்ண அரையிறுதி போட்டி இன்று ஆரம்பம்.!

45 பார்வைகள்

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண அரையிறுதி போட்டிகளில் இன்று (03) அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இளையோர் அணிகள் மோதவிருப்பதோடு நாளை (04) ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முதலாவது அரையிறுதிப் போட்டி புலவாயோவிலும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஹராரேவிலும் நடைபெறவுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள களமிறங்கவுள்ளது.இதில் இந்திய அணி நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்க்கமான சுப்பர் 8 போட்டியில் வெற்றியீட்டியே அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் இளையோர் அணி 46.2 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றின் குழு 2 இல் முதல் இடத்திற்கு முன்னேறியே இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி ஹராரேவில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0