உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

52 பார்வைகள்

உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்கராஸ் தனது 22 ஆவது வயதில் 2026 அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை நான்கு செட் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை (02) நடந்த 2026 அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்கராஸ் வரலாறு படைத்தார்அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதன்முறையாக வென்றதன் மூலம், டென்னிஸ் விளையாட்டின் நான்கு முக்கிய கிண்ணங்களையும் வென்ற, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முடித்த இளைய வீரர் என்ற பெருமையை ஸ்பெய்ன் நட்சத்திரம் பெற்றார்.

சீனியர் பட்டத்தை வென்ற ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்கராஸ் தனது தொழில் வாழ்க்கையில் பெறும் ஏழாவது பெரிய பட்டம் இதுவாகும்.கடந்த எட்டு கிரேண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஐந்தில் அல்கராஸ் வென்றுள்ளார்.மேலும் அவரது எட்டு முக்கிய இறுதிப் போட்டிகளில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்திலும் வியக்கத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளார்.

ஓபன் சகாப்தத்தில் தொழில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆறாவது நபராக, ஜோகோவிச், ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், ஆண்ட்ரே அகாசி மற்றும் ராட் லேவர் ஆகியோருடனான பட்டியலில் இணைந்துள்ளார்.24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் 23 வயதை அடைவதற்கு முன்பு ஒரு பெரிய பட்டத்தை மட்டுமே வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0