உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான இறுதி டி20 போட்டியில் இந்தியா வெற்றி!

41 பார்வைகள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 (T20) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் ஏற்கனவே தொடரில் 3-1 என முன்னிலை வகித்த இந்திய அணி, இறுதிப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

அதன்படி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து அணிக்கு 271 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இந்திய அணி சார்பில் இளம் அதிரடி துடுப்பாட்ட வீரர் இஷான் கிஷான் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது.மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, இலக்கை எட்ட முடியாமல் 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய வெற்றியுடன் இந்தியா 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0