உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கை – இங்கிலாந்து டி20 தொடர் இன்று.!

69 பார்வைகள்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று (30) ஆரம்பமாகிறது.இந்த முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தத் தொடரில் 3 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதலாவது போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று இரவு பல்லேகல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்தது.இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்குபற்றும் கடைசி இருபதுக்கு-20 தொடர் இதுவாகும்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 14 இருபதுக்கு-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.இலங்கை அணியானது 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக இருபதுக்கு-20 தொடரை ஒன்றை கைப்பற்றவில்லை.

அதேபோன்று, இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக ஒரு இருபதுக்கு-20 போட்டியில் வெற்றியீட்டியதும் 2014 ஆம் ஆண்டிலேயாகும்.இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற கடந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.இவ்வாறான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0