உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

52 பார்வைகள்

இந்தியாவுக்கு எதிராக நேற்று இரவு (28) விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நான்காவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு டிம் சீஃபர்ட் மற்றும் டெவோன் கான்வே சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.


டிம் சீஃபர்ட் 36 பந்துகளில் 62 ஓட்டங்களையும், டெவோன் கான்வே 23 பந்துகளில் 44 ஓட்டங்களையும் குவித்து அதிரடியாக ஆடினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 8.2 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டியது.இதனைத் தொடர்ந்து இந்தியப் பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், இறுதிக்கட்டத்தில் டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ஓட்டங்களை எடுத்துக் கொடுத்து நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க உதவினார்.


20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை குவித்தது.
216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சிவம் துபே 23 பந்துகளில் 65 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 30 பந்துகளில் 39 ஓட்டங்களையும் எடுத்து போராட்டம் அளித்தனர்.எனினும், இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களுக்கு சுருண்டது.


நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் அணித் தலைவர் மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக செயல்பட்டு, 4 ஓவர்களில் 26 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை டிம் சீஃபர்ட் பெற்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0