உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஒருநாள் – டி20 தொடர்களுக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் செய்யும் இலங்கை மகளிர் அணி..!

58 பார்வைகள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்காக எதிர்வரும் பெப்ரவரி 20 தொடக்கம் மார்ச் 3 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

தொடரின் இந்த ஆறு போட்டிகளும் கிரெனடா தேசிய அரங்கில் நடைபெறவுள்ளன. பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறவிருப்பதோடு இதன் அடுத்த இரு போட்டிகளும் பெப்ரவரி 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும். தொடர்ந்து டி20 தொடர் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகும். இதன் அடுத்த இரு போட்டிகளும் மார்ச் 1 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறும்.இதில் டி20 தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமாக உள்ளது.

2026 மகளிர் டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன், ஜூலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தயாராவதற்கு இந்தத் தொடர் முக்கியமாக உள்ளது. உலகக் கிண்ணத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் குழு 2 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துடன் இடம்பிடித்துள்ளன.

இந்த குழுவில் இடம்பெறும் மேலும் இரு அணிகளும் இன்னும் தகுதி பெறவில்லை.இலங்கை மகளிர் அணி 2024 ஆசிய கிண்ணத்தை வென்ற பின் முதல் டி20 தொடர் ஒன்றை வெல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர்கள் கடைசியாக 2024 இல் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்தது. அதில் இலங்கை அணி ஒருநாள் தொடரை 3–0 என வென்றதோடு டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2–1 என கைப்பற்றியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

37 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

17 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

16 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

35 0 0