உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு.!

சினிமா 8 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இம்மாதம் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையினால் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி ஆறாம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, “தணிக்கை வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவு செய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது.ஆகவே தணிக்கை வாரியத் தலைவரின் முடிவைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தப் படத்திற்கு சான்றிதழை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்தது தணிக்கை வாரியம். திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தணிக்கை சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை, சென்னை மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில் குறித்த திரைப்படத்திற்கான இறுதி தீர்ப்பு இன்று (27) அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

71 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

62 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

68 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

84 0 0