செழியன் நடத்தும் பயிற்சி பட்டறையில் இருந்து 34 புதிய திரைப்படங்கள்.!
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்தப் பயிற்சி பட்டறையில் பயின்ற 34 மாணவர்கள் ஒன்றிணைந்து, 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். இத்திரைப்படங்களுக்கான அறிமுக விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
ஒரே பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்படுவது, தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்தப் பயிற்சி பட்டறையில் பயின்ற 34 மாணவர்கள் ஒன்றிணைந்து, 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். இத்திரைப்படங்களுக்கான அறிமுக விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
ஒரே பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்படுவது, தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.இந்த நிகழ்வில், திரைப்படத் தொகுப்பாளர்கள் பி.லெனின், ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவி வர்மன், வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளரும் திரைப்பட விமர்சகருமான தனஞ்ஜெயன், இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய திரைப்படத் தொகுப்பாளர் பி.லெனின்,
“ஏழு ஸ்வரங்கள் தெரிந்திருந்தால் உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச முடியும். அதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் தெரிந்தாலே போதும்.இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவப் படைப்பாளிகளின் சுயவிவர பட்டியலில், ஒவ்வொரு படைப்பிற்குமான அதிகபட்ச பட்ஜெட்டாக ரூ.50 இலட்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் படப்பிடிப்பு நாட்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
தற்போது அந்த திரைப்படங்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அவற்றைப் பார்க்கும் போது, படப்பிடிப்பு நாட்கள் எவ்வளவு குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. முழுநீள திரைப்படங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவர்கள் சிறப்பாக நிறைவு செய்துள்ளனர்.நான் திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கி இது 61-வது ஆண்டு. இன்றும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஒரு திரைப்படத்தில் ஸ்கிரிப்ட்தான் மிக முக்கியமானது. அதேபோல் திரைக்கதையும் முக்கியம். இளம் இயக்குநர்கள் இதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.