உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

“கராத்தே பாபு” திரைப்பட டீசர் வெளியீடு – ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு.!

சினிமா 8 மாதங்கள் முன்
83 பார்வைகள்

இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள “கராத்தே பாபு” திரைப்படம், திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்திரைப்படத்தில் நாயகனாக நடிகர் ரவி மோகன் நடித்துள்ளார்.

தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பை அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவருடன் இணைந்து கே. எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.“கராத்தே பாபு” திரைப்படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றியுள்ளார்.

திரைப்படத்தின் அரசியல் பின்னணியையும் கதையின் உணர்ச்சித் தன்மையையும் வலுப்படுத்தும் வகையில் அவரது இசை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. டீசரில் ரவி மோகனின் கதாபாத்திர வடிவம், போர்க்காட்சிகள் மற்றும் அரசியல் பின்னணி கவனம் ஈர்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.டீசரை கண்ட ரசிகர்கள், சமூக ஊடகங்கள் மூலம் தங்களது பாராட்டுகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

71 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

62 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

68 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

84 0 0