உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தை விரும்பவில்லை”- விஜய் சேதுபதி.!

சினிமா 9 மாதங்கள் முன்
55 பார்வைகள்

நாயகனை முன்னிலைப்படுத்தும் வில்லன் கதாபாத்திரத்தை விரும்பவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.ரஜினி நடித்துவரும் ’ஜெயிலர் 2’ படத்தில் கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இது தகவலாக இருந்தாலும், தற்போது விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அப்பேட்டியில் வில்லனாக நடிப்பது குறித்து தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “’ஜெயிலர் 2’ படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். ஏனென்றால் ரஜினி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இருக்கும் போது நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. இப்போது எனக்கு உற்சாகமூட்டும் கதைகளில் மட்டுமே வில்லன் மற்றும் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன்.

வில்லனாக நடிப்பதற்கு பல கதைகள் கேட்டேன். ஆனால், பல இயக்குநர்கள் என்னிடம் ஒரு நாயகனை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தையே கொண்டு வந்தார்கள். அதனை செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

71 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

62 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

68 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

84 0 0