உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் 20 மெகாவாட் கொள்ளளவுடைய காற்றாலை மின் நிலையம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
52 பார்வைகள்

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவாட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் நேற்று(15) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்கட்டமைப்பு டன் இணைக்கப்பட்டது.

‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நாட்டின் வலுசக்தி வரலாற்றில் முதல் முறையாக, தலா 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட மிகப்பெரிய 04 காற்று விசையாழிகள் (Turbines) இங்கு நிறுவப்பட்டுள்ளன.

உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்லும் பாரிய வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதோடு, இது உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பங்களிப்பு செய்கிறது.

நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து காற்றாலை மின்நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, விசையாழிகளை இயக்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

வலு சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஷெர்லி குமார, இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார ஆகியோருடன், CEYLEX Renewables நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் சமீர கணேகொட மற்றும் அதன் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

65 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

66 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

74 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

81 0 0