உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெண்கள் அபிவிருத்தி மற்றும் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
52 பார்வைகள்

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அபிவிருத்தி மற்றும் அரசியல் பங்கேற்பை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்வு இன்று (12) திருகோணமலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்ட குறித்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிதி உதவியுடன் Search for common Ground மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதில் வளவாளராக எம்.ஐ.எம்.சதாத், திட்ட வசதிப்படுத்துனராக துர்கா புலேந்திரன், சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் ஜெரோமி ரொமைன் ராஜெல் மற்றும் பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இது கிழக்கு மாகாணம் முழுவதும் 10 அரை நாள் கொண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பெண் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வெடிபொருள் அகற்றும் தொழிலாளர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பெண்களின் அரசியல், சமூக மற்றும் தீர்மானம் எடுக்கின்ற செயற்பாடுகளில் அர்த்தமுள்ள பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான நடைமுறை தீர்வுகளை ஆராயும் ஒரு பாதுகாப்பான மற்றும் கூட்டுறவான ஒரு தளத்தை வழங்குகின்றது.

குறித்த கலந்துரையாடலின் மூலமாக பெண்களின் முடிவு எடுத்தல் நிலமையின் போது தற்காலிக நிலையை புரிதல், தடைகளை அடையாளம் காணுதல், போன்றவற்றை வெளிப்பாடாக எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0