உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னாரில் புயலால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் ஊடாக (I.O.M ) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி பொருட்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (8) கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நோயாளர் விடுதிகளில், நோயாளர்கள் பயன்படுத்துகின்ற ஒரு தொகுதி பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் துணைத் தூதுவர் தலைமை இடப்பெயர்வு சுகாதார அதிகாரி டாக்டர் சிமியோனெட்டி அசிஸ், ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் இடப்பெயர்வு சுகாதார மருத்துவர். ஆர்.எம்.உதீர சரித்ரா ஹரிச்சந்திர ஆகியோர் இணைந்து கையளித்தனர்.

இதன் போது மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட், வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0