உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வங்கதேச கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி; புள்ளிகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கை.!

52 பார்வைகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கள் நாட்டு அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச அணியின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 35 நாட்களில் 11 ஹிந்துக்கள், கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டனர். மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், அங்கு ஆட்சி நடத்தும் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

\இதனால், இரு நாடுகளின் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாட இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இந்த செயலுக்கு வங்கதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வங்கதேச அணி வராது என்றும் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், டி20உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியது.

இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டவணைப்படி, வங்கதேச அணி இந்தியாவில் தான் விளையாட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், புள்ளிகளை இழக்கநேரிடும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், ஐசிசியிடம் இருந்து இதுபோன்ற எந்த அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0