உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த பெண் குழந்தை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
63 பார்வைகள்

திருகோணமலை – மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று மாலை ஒரு வயதும் எட்டு மாதங்களும் மதிக்கத்தக்க பெண் குழந்தை நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த ஆலியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வீட்டின் அருகே தேங்கியிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த உடனேயே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் பள்ளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே, சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0