உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தமிழக மீனவரை விடுவிக்குமாறு உருக்கமான கோரிக்கை..!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

கடந்த 30/12/2026 அன்று இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட தினசரி மருந்து உட்கொள்ளும் இந்திய மீனவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி மீனவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பிற்பகல் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 30ஆம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து ஒரு மீன்பிடி படகையும் அதிலிருந்த பிரபு (49), நாகராஜ் (47), ரூபன் (45) ஆகிய மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீனவர் பிரபு மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாளாந்தம் தூக்க மருந்து பாவிப்பவர் என்றும், கடந்த 3ஆம் திகதி மதுரையில் உளவியல் ரீதியாக சிகிச்சை பெற இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மீனவர் பிரபு தூக்க மாத்திரை பாவிக்காமலும், உடைகளை மாற்றாமல் உணவு உண்ணாமல் மன நலம் பாதிக்கப்பட்டவாறு இருப்பதாக உடன் இருக்கும் மீனவர்கள் தெரிவித்ததாக பிரபுவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

64 0 0