உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

75 ஆண்டுகளாக இலவச சேவை வழங்கும் இந்தியாவின் ஒரே ரயில்..!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

பொதுவாகவே ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயம் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். தற்காவத்தில் இந்த சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பயணிகளுக்கு இலவச சேவையை வழங்கிவரும் ஒரு ரயிலும் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்தா? தினமும் முற்றிலும் இலவசமாக இயங்கி வரும் இந்த ரயில் எங்கு ஆரம்பித்து எங்கு பயணிக்கின்றது, மற்றும் இந்த இலவச ரயில் குறித்த பல்வேறு விடயங்களையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்இந்த ரயிலானது, தினசரி பஞ்சாபின் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ராவுக்கும் இடையே 13 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த சேவையை கடந்த 75 ஆண்டுகளாக இலவசமாக வழங்குகின்றது.

குறித்த ரயிலானது அழகிய சட்லஜ் நதி மற்றும் சிவாலிக் மலைகளின் வழியாகச் செல்கிறது. இந்த ரயில் சேவை 1948இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஆசியாவின் மிக உயரமான அணைகளில் ஒன்றான பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்திற்காக தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்காகவே இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1953ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் குறித்த ரயிலில் பொருத்தப்பட்டதுடன், அதன் இருக்கைகள் எளிமையாக இருந்தாலும், இந்த ரயிலின் நீண்ட வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.குறித்த ரயிலானது ஒரு மணி நேரத்திற்கு 18 முதல் 20 லிட்டர் எரிபொருள் செலவழித்தாலும், இந்தப் பகுதி மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அணை கட்டுமானத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூறும் முகமாகவும் இந்த சேவையை இலவசமாகவே இன்று வரையில் தொடர்ந்து வருகின்றது.இந்த ரயிலில் தினம்தோறும் சுமார் 800 பேர் வரையில் பயணம் செய்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் 3 சுரங்கப்பாதைகள் மற்றும் 6 ரயில் நிலையங்கள் காணப்படுகின்றது.இதுவரையில், எத்தனை முறை அரசாங்கங்கள் மாறியிருந்தாலும், காலநிலைகள் வாழ்க்கை முறைகள் மாறியிருந்தாலும் ரயில்வே அமைப்பில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஒரு சேவை மட்டும் மாறாமல், அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0