உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா!

51 பார்வைகள்

விஜய் ஹஸாரே தொடர் போட்டியில் உத்தரகாண்ட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய கோவா அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் 8 (16) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அஸான் தோடா 34 ஓட்டங்கள் எடுத்தார்.எனினும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்நேஹல் கௌதங்கர் சதம் விளாச, கோவா அணி 49.1 ஓவரில் 270 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அபினவ் தேஜ்ரானா 61 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசினார். அபய் நேகி, சுசித் தலா 3 விக்கெட்டுகளும், தேவேந்திர சிங் மற்றும் மயங்க் மிஷ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் களமிறங்கிய உத்தரகாண்ட் அணியில் யுவராஜ் 3 ஓட்டங்களில் வெளியேற பிரியன்சு 44 (58) ஓட்டங்களும், குணால் 33 (54) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஷஷ்வத் டங்வால் மற்றும் ஆஞ்சநேயா சூர்யவன்ஷி இருவரும் அதிரடி ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணியை 47வது ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.ஆஞ்சநேயா சூர்யவன்ஷி (Aanjaneya Suryavanshi) 87 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்களும், ஷஷ்வத் டங்வால் (Shashwat Dangwal) 70 பந்துகளில் 70 ஓட்டங்களும் விளாசினர். வாசுகி கௌஷிக், தர்ஷன் மற்றும் ஷுபம் தேசாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.துடுப்பாட்டத்தில் சொதப்பிய அர்ஜுன் டெண்டுல்கர், 8 ஓவர்கள் வீசி 54 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0