நியூசிலாந்து தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி சுப்மன் கில் தலைமையிலான குறித்த குழாமில் ரோஹிட் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்,ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட்,ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, மொஹமட் சிராஜ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக கடந்த காலங்களில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர், தற்போது முழு உடல் தகுதியுடன் அணிக்குத் திரும்பியுள்ளார்.
மேலும் அவர் இந்த தொடரில் துணை தலைவராகவும் செயற்படவுள்ளார்.அத்துடன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.