உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

20/20 உலகக் கிண்ணப் போட்டிக்காக கொழும்பு SSC மைதானத்தின் நவீனமயமாக்கல் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

78 பார்வைகள்

2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்காக கொழும்பு SSC மைதானத்தின் அனைத்து நவீனமயமாக்கல் பணிகளும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு SSC மைதானத்தில் நிறுவப்படும் புதிய அதிநவீன LED மின்விளக்கு அமைப்பைப் பொருத்தும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக வீரர்கள் ஓய்வறையை மேம்படுத்தல், போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்களுக்காக புதிய அறைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல பணிகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த ஒட்டுமொத்தத் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 1.7 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.இதேவேளை, ”முழுமையான திட்டத்திற்கும் 1.7 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவாகிறது எனவும் ICC, போட்டிகளுக்காக கொடுப்பனவுகளை வழங்குகிறது எனவும் அவற்றையும் சேர்த்துக்கொண்டு இலங்கை கிரிக்கெட்டின் ஏனைய வருமானங்களையும் சேர்த்தே இந்த அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறோம் எனவும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுப்போம் எனவும் என்றார் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த, தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

73 0 0