உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழா ஆடு, கோழி பலியிட தடை .!

இந்திய செய்திகள் 9 மாதங்கள் முன்
73 பார்வைகள்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது,’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாணிக்கமூர்த்தி தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு புனிதமான இடமாகும். மலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமானது. மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது.

மலையில் தர்கா நிர்வாகம் ஆடு, கோழி பலியிடக்கூடாது. அசைவ உணவு பரிமாறக்கூடாது. அது வழக்கம் என கருதினால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.இதை எதிர்த்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யவில்லை. சிவில் நீதிமன்றத்தை அணுகவில்லை.டிச., 21 முதல் ஜன., 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடுவிழாவை தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதியாகும். கந்துாரி நடத்த அனுமதி அளித்தது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.மலை மீது முருகனின் தலவிருட்சமான கல்லத்தி மரம் உள்ளது.

அதில் நிலா பிறை பொறித்த கொடி கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டும். மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன்: தற்போதைய திருவிழா உரிமை பிரச்னை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே சார்ந்தது. ஜன., 6 ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2023 ல் அனுமதி வழங்கப்பட்டது. அதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். கந்துாரி மகா உற்ஸவத்திற்கு அனுமதி வழங்கப்படாது.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன்: தற்போதைய திருவிழா உரிமை பிரச்னை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே சார்ந்தது. ஜன., 6 ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2023 ல் அனுமதி வழங்கப்பட்டது. அதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்படும். கந்துாரி மகா உற்ஸவத்திற்கு அனுமதி வழங்கப்படாது

. ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படும்.விலங்கு பலியிடுதல், இறைச்சியை எடுத்துச் செல்லுதல், அசைவ உணவு தயாரித்தல் மற்றும் எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0