உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி விபரங்களை வெளியிட்ட பங்களாதேஷ்!

76 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்துள்ளது.இதன்போது, பங்களாதேஷ் நான்கு டெஸ்ட் போட்டிகள், 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளை நடத்தும்.

ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் 2026 மார்ச் மாதத்தில் உள்ளூர் சீசன் தொடங்கும்.பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷுக்கு பயணிக்கும்.

அத்துடன், மே மாதத்தில் பாகிஸ்தான் மீண்டும் இரண்டு டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளும். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (WTC) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

நியூசிலாந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை உள்ளடக்கிய முழு வெள்ளை பந்து சுற்றுப்பயணத்திற்காக பங்களாதேஷுக்கு செல்லும்.அவுஸ்திரேலியா ஜூன் மாதத்திலும், இந்தியா ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரிலும் பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்ளும்.

நியூசிலாந்தைப் போலவே, அவர்களும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவார்கள்.பங்களாதேஷ் அணியின் 2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் சீசன் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் WTC இன் ஒரு பகுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்களுடன் முடிவடையும்.

சர்வதேச போட்டிகளுக்கு மேலதிகமாக, இலங்கை ஏ அணி மே மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் என்பதும் குறிப்படத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

73 0 0