உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அவுஸ்திரேலிய- சிட்னி நகரம் அமைதி மற்றும் ஒற்றுமை என்ற செய்தியுடன் புத்தாண்டை வரவேற்றது.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
79 பார்வைகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம், சமீபத்தில் போண்டாய் கடற்கரையில் (Bondi Beach) நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சுவடுகள் மறையும் முன்பே, “அமைதி மற்றும் ஒற்றுமை” என்ற செய்தியுடன் புத்தாண்டு 2026-ஐ வரவேற்றது.

உலகப்புகழ் பெற்ற சிட்னி ஹார்பர் பாலம் (Sydney Harbour Bridge) முழுவதும் அமைதியை வலியுறுத்தும் வெண்மை நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.மேலும், தாக்குதலுக்குள்ளான யூத சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலத்தின் தூண்களில் யூத மதச் சின்னமான ‘மெனோரா’ (Menorah) ஒளிப்படம் திரையிடப்பட்டது.

கடந்த டிசம்பர் 14-ம் திகதி ஹனுக்கா பண்டிகையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டிருந்தன.சிட்னி நகர் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொதுவாக அவுஸ்திரேலியாவில் அரிதாகக் காணப்படும் அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளை ஏந்திய பொலிஸார், ஒப்பேரா ஹவுஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இரவு 11:00 மணியளவில் இசை மற்றும் பார்ட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தாக்குதலில் பலியானவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மொபைல் போன் விளக்குகளை ஒளிரச் செய்து அஞ்சலியில் பங்கேற்றனர்.

இத்தகைய அசாதாரண பாதுகாப்புச் சூழலை சிலர் சங்கடமாக உணரக்கூடும் என்றாலும், மக்களின் பாதுகாப்பிற்காக இதில் சமரசம் செய்ய முடியாது என்று நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.நள்ளிரவு பிறந்ததும், சிட்னியின் பாரம்பரியமான பிரம்மாண்ட வாணவேடிக்கைகள் வானைப் பிளந்தன.

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து புத்தாண்டைக் கொண்டாடுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, லட்சக்கணக்கான மக்கள் ஹார்பர் பகுதியில் குவிந்தனர்.

சிட்னியில் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத் தொடர், அடுத்தடுத்து துபாய், லண்டன் மற்றும் நியூயோர்க் என உலகெங்கும் தொடர்ந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0