உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெளியாகியுள்ள அமெரிக்கத் தொழிலாளர் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
90 பார்வைகள்

அமெரிக்கத் தொழிலாளர் திணைக்களத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில் வேலையின்மை உதவி கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 199,000-ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஒரு மாதத்தில் பதிவான மிகக்குறைந்த அளவாகும்.இருப்பினும், 2025-ஆம் ஆண்டு முழுவதும் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மந்தமாகவே காணப்பட்டது.குறிப்பாக, நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 4.6 சதவீதமாக உயர்ந்தது, இது கொரோனா பெருந்தொற்று காலமான 2021-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் மேற்கொண்ட மத்திய அரசுப் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையே இந்த வேலையின்மை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.சுமார் 1.62 லட்சம் அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது விருப்ப ஓய்வு பெற்ற தாக்கம் சந்தையில் எதிரொலிக்கிறது.

மேலும், ட்ரம்ப்பின் இறக்குமதி வரி (Tariff) கொள்கைகளால் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன.

அமேசான், யுபிஎஸ் மற்றும் ஜெனரல் மோட்டர்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வலுவாக இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0