உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சீனாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய வரி!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
86 பார்வைகள்

சீனா பிறப்பு விகிதத்தை உயர்த்தும் முயற்சியாக, இன்று முதல் கருத்தடை சாதனங்களுக்கு 13வீதம் வரி விதித்துள்ளது.அத்துடன், குழந்தை பராமரிப்பு சேவைகள், திருமண சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், கடந்த 2024-ல் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 9.54 மில்லியன் மட்டுமே என்ற அளவில் பதிவாகியுள்ளது.

அதிக செலவு, வேலை, குடும்ப சமநிலை சிக்கல், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் இளைஞர்கள், யுவதிகள் குழந்தை பெற தயங்குகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.அரசின் இந்த புதிய நடவடிக்கையானது, பிறப்பு விகிதத்தை உயர்த்துவதை விட, அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சி என நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளில் அரசு அதிகமாக தலையிடுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.இதேவேளை கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிப்பது தேவையற்ற கர்ப்பம் மற்றும் சமூக நோய் பரவல் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கலாம் என்றும் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், வரி மாற்றங்கள் இருந்தாலும், குழந்தை வளர்ப்பின் போது உயர்ந்த செலவு மற்றும் பொருளாதார அச்சம் தீர்க்கப்படாவிட்டால், பிறப்பு விகிதம் அதிகரிப்பது கடினம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0