உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
85 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப் பிரமாண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (01.01.2026) புதிய மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

புதிய ஆண்டினை வரவேற்று தமது அரச கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன்போது உத்தியோகத்தர்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டதுடன், அரசாங்க அதிபர் தனி நபர் மாற்றத்தின் மூலமே சமூகத்தில் பாரிய மாற்றுத்தை ஏற்படுத்த முடியும்.

மேலும், மக்களுக்கு ஊழல் அற்ற சேவையை வழங்க அனைவரும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0