உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா புத்தாண்டில் புதிய திட்டம்!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
56 பார்வைகள்

2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு 13 சதவீத வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதே நேரத்தில் குழந்தை பராமரிப்பு சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நாடு பிறப்பு விகிதங்களை அதிகரிக்க முயற்சிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த வரி முறையின் மறுசீரமைப்பு, 1994 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பல விலக்குகளை நீக்குகிறது.முன்னதாக சீனா அதன் பல தசாப்தங்களாக ஒரு குழந்தை விதியை இன்னும் அமுல்படுத்தி வந்தது.

புதிய வரி மறுசீரமைப்பானது திருமணம் தொடர்பான சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கிறது.

அத்துடன், பெற்றோர் விடுமுறையை நீட்டித்தல் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்குதல் உள்ளிட்டவையும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான சீன அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகக் குறைந்துவிட்டதாகவும், 2024 ஆம் ஆண்டில் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு, மக்கள் எத்தனை குழந்தைகளைப் பெறலாம் என்பது குறித்த விதிகளை சீனா தளர்த்தத் தொடங்கியபோது பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையில் பாதி ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0