உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனாவின் மத்தியஸ்தக் கூற்றை நிராகரித்த இந்தியா!

இந்திய செய்திகள் 9 மாதங்கள் முன்
65 பார்வைகள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இராணுவ மோதலின் போது புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்த கூற்றுக்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.போர்நிறுத்த முடிவில் எந்த மூன்றாம் தரப்பினரும் ஈடுபடவில்லை என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மே 10 அன்று ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து, இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போர்நிறுத்தம் எட்டப்பட்டது என்பதை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, டொனால்ட் ட்ரம்பைப் போல நடந்து கொண்டு, மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உட்பட பல உலகளாவிய மோதல்களுக்கு பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்தியாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மத்தியஸ்தம் தொடர்பில் செவ்வாயன்று (30) நடந்த ஒரு நிகழ்வில் பேசிய சீன வெளிவிவகார அமைச்சர், இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு உள்ளூர் போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அதிகமாக வெடித்தன.

நீடித்த அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில், சீனா ஒரு புறநிலை மற்றும் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.அதேநேரத்தில் போருக்கான அறிகுறிகள் மற்றும் மூல காரணங்கள் இரண்டையும் நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.

சூடான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இந்த சீன அணுகுமுறையைப் பின்பற்றி, வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்தி பிரச்சினை, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள், பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்சினைகள் மற்றும் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான அண்மைய மோதல் ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம் – என்று கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0