உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மேசைப்பந்தாட்டத்தில் இலங்கை புதிய மைல்கல்; சர்வதேச‍ே அரங்கில் முதலிடத்தை பிடித்த தாவி சமரவீர!

51 பார்வைகள்

இலங்கை மேசைப் பந்தாட்டம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.சர்வதேச மேசை பந்தாட்ட சம்மேளனம் (ITTF) வெளியிட்டுள்ள அண்மைய 11 வயதுக்குட்பட்ட ஆடவர் மேசைப் பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் கல்கிஸை செயிண்ட் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் தாவி சமரவீர (Taavi Samaraweera) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எந்தவொரு வயதுப் பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும்.அதேநேரம் 10 வயதான தாவி சமரவீர, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக தரவரிசையில் 11 ஆவது இடத்தில் உள்ளார்.

அவரது விரைவான வளர்ச்சி அவரை உலக மேசை பந்தாட்டத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தாலியில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளையோர் உலக தரவரிசைப் போட்டியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தாவி இந்த நிலையினை எட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

73 0 0