உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தோனேஷியாவில் சீற்றத்துடன் எரிமலை; மக்கள் வெளியேற்றம்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
57 பார்வைகள்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.

ஆச்சே மாகாணத்தில் பெனர் மெரியா மாவட்டத்தில் 8,600 அடி உயரமுள்ள பர்னி தெலோங் எரிமலையில், ஏழு முறை பலத்த அதிர்வுகள் ஏற்பட்டன.இந்த அதிர்வு, 5 கி.மீ. துாரம் வரை உணரப்பட்டது.

கடந்த ஜூலை முதல் இதன் செயல்பாடு அதிகரித்து வந்த நிலையில், சில மாதங்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் எரிமலை வெடித்து சிதறலாம் என அந்நாட்டு புவியியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து பர்னி தெலோங் எரிமலையை சுற்றி 5 கி.மீ., சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0