உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அவுஸ்திரேலியாவை பின்பற்றத் தயாராகும் பிரான்ஸ்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து 2026 ஆண்டு தொடக்கம் 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை தடை செய்ய பிரான்ஸ் அரசு, திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.இது விரைவில் சட்ட ரீதியான சரிபார்ப்புக்கு அனுப்பப்பட்டு, புதிய ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய வாரங்களில் அவுஸ்திரேலியாவின் உலகிலேயே முதலாவது சமூக வலைதள தடையை (16 வயதுக்குக் கீழ்) விரைவாக பின்பற்ற வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் தடை டிசம்பர் மாதம் அமலுக்கு வந்தது. இதில் ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக், யூடியூப் ஆகியவை அடங்கும்.

15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளங்கள் முழு தடை. உயர்நிலைப் பள்ளிகளில் (15-18 வயது மாணவர்கள் பயிலும்) அலைபேசிகளுக்குத் தடை. (தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இலைபேசி தடை உள்ளது).

இந்த வரைவு விரைவில் ஆய்வுக்கு அனுப்பப்படும். கல்வி தொழிற்சங்கங்களும் உயர்நிலைப் பள்ளி அலைபேசி தடை குறித்து ஆய்வு செய்யும். சமூக வலைதள தடை செப்டம்பர் 2026 முதல் அமலுக்கு வர வேண்டும் என அரசு விரும்புகிறது. சட்ட வரைவில், “பதின்வயதினரின் அதிகப்படியான திரை நேரத்தால் ஏற்படும் ஆபத்துகள்” குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில் தகாத உள்ளடக்கங்களுக்கு ஆளாகுதல், ஆன்லைன் இழிவுபடுத்தல், தூக்கக் கோளாறு ஆகியவை அடங்கும்.எதிர்கால தலைமுறையினரை இத்தகைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்ரோன் இம்மாதம் செயிண்ட் மாலோவில் நடந்த பொது விவாதத்தில், இளம் பதின்வயதினருக்கு சமூக வலைதள தடை வேண்டும் என்று உறுதிப்படுத்தினார். அதிக திரை நேரம் இருந்தால் பள்ளி சாதனைகள் குறையும்… மனநல பிரச்சினைகள் அதிகரிக்கும் என கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது

யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய பாலங்களை இலக்கு வைத்து, ரஷ்யா தொடர்ந்து 4 ஆவது நாளாக ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இன்று (04)…

81 0 0
உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த காலத்தை விட மிகவும் வலுவான பதிலடி : ஈரான் எச்சரிக்கை!!

தமக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், கடந்த காலத்தை விட மிகவும் வலுவான மற்றும் தீர்க்கமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ்…

62 0 0
உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

100 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

106 0 0