உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 28.11.2026

ராசி பலன்கள் 45 நிமிடங்கள் முன்
28 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில், தலை நிமிர்ந்து நடக்கும் அளவுக்கு உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். அவமானங்கள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றத்தை அடைவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கத் தொடங்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிரச்சினைகள், போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மன தைரியத்தோடு செயல்பட வேண்டும். எந்த இடத்திலும் சோர்ந்து உட்காரக் கூடாது. அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்று தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். காரிய தடை விலகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையை பொறுத்தவரை ப்ரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும். தொடர்ந்து உங்களுடைய கடமைகளை செய்து விடுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கான நன்மைகள் தானாக உங்களைத் தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நண்பர்களோடு இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நிறைய நேரம் மிச்சம் இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். மனதிற்கு பிடித்த நபருடன் நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். நிம்மதி பிறக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பண கஷ்டம் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு ஆர்வம் இருக்கும். கமிஷன் தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய கல்வியில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீங்கள் நினைத்த நல்ல விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். வியாபாரத்தில் விட்ட இடத்தை பிடிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இன்று நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சந்தோஷம் எழும். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பெருமூச்சு விடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும். தலை மேல் இருந்து வந்த பாரம் குறையும். நிம்மதி பிறக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். உடல் நலத்தில், மருத்துவம் சம்பந்தப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள் ஒரு முடிவுக்கு வரும். பிரச்சினைக்கு தீர்வு தெரியாமல் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தவர்களுக்கு எல்லாம் இன்று விடுதலை கிடைக்கும். நீண்ட நாள் இருந்த கால் வலி, இடுப்பு வலி காணாமலேயே போய்விடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம். ஆர்பாட்டம் வேண்டாம். மனதில் பட்ட விஷயத்தை அப்படியே வெளிபடையாக பேசாதீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து நிறைய பேர் கண் திருஷ்டி வைக்க வாய்ப்பு உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் மனதில் தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குடும்ப உறவுகளோடு ஒன்றாக பேசி சந்தோஷமாக நிறைய நேரத்தை செலவு செய்வீர்கள். இந்த நாள் மறக்க முடியாத நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக தான் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதற்காக சோர்ந்து போகக்கூடாது. நிச்சயம் உங்களுக்கான நல்லது, உங்களை தேடி வரும். மன அழுத்தத்தை விட்டு விடுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, உங்களுடைய கடமைகளை மட்டும் செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 27.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமையும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். இதுநாள் வரை மனதில் தேக்கி…

39 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன போராட்டங்கள் எதிர்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. முயற்சிகளில் சின்ன தடை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி உங்கள்…

28 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இளைஞர்கள் மாணவர்கள் இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரிய தடை…

85 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பெரிதாக எதிர்பார்ப்பு வைக்கக் கூடாது. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் உங்களை காயப்படுத்தும். உங்களுடைய…

131 0 0