மன்னார் மடு, பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மாலை மாவீரர் தின நினைவேந்தல் இடம் பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை (27) மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தந்தையால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்,உறவினர்கள்,முன்னாள் போராளிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.










