உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 26.11.2026

ராசி பலன்கள் 36 நிமிடங்கள் முன்
25 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன போராட்டங்கள் எதிர்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. முயற்சிகளில் சின்ன தடை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி உங்கள் கையை வந்து சேரும். விநாயகர் வழிபாடு செய்துவிட்டு இந்த நாளை தொடங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிம்மதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணையை கரம் பிடிக்க நல்ல நேரம் கை கூடிவரும். சுபகாரிய தடை விலகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர காத்துக்கொண்டிருக்கிறது. புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரிய தடை விலகும். ப்ரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனதிற்கு நிம்மதி இருக்கும். நீண்ட நாள் மனதில் போட்டு பூட்டி வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். மனப் பாரம் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் சுறுசுறுப்பு வெளிப்படும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சினைகளை கண்டு மனம் துவண்டு போகக்கூடாது. இறை நம்பிக்கை வையுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது சில சந்தேகங்கள் வரலாம். மனம் ஒரு நிலையாக இருக்காது. அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. கூடுமானவரை புது முயற்சிகளை நாளை தள்ளி வைக்கலாம். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பல பேருடைய பிரச்சினைகளுக்கு உங்களுடைய பதில் நல்லதொரு தீர்வை தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சில பேருக்கு தங்கம் வாங்கக்கூடிய யோகமும் கைகூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். இந்த நாள் மனதிற்கு இதமான அனுபவங்களும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவலைகள் இருக்கும். சோகம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபருடன் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யாதீர்கள். எதிரிகளை கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். வேலைகளில் சின்னச் சின்ன பின்னடைவு வரும். வியாபாரத்தை பொறுத்தவரை மந்தமான சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட வரலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். பிரச்சினைகளை கண்டு துவண்டு போக மாட்டீர்கள். உண்மையை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களுடைய பேச்சு தெளிவாக இருக்கும். உங்களுடைய நடவடிக்கை எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நல்ல சாப்பாடு, தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு வங்கிக் கடன் முயற்சி செய்யலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இளைஞர்கள் மாணவர்கள் இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரிய தடை…

84 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பெரிதாக எதிர்பார்ப்பு வைக்கக் கூடாது. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் உங்களை காயப்படுத்தும். உங்களுடைய…

131 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்கவைத்துக்…

153 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், என்று இந்த நாள், நல்ல அனுபவங்களை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக…

173 0 0