உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 24.11.2026

ராசி பலன்கள் 1 நாள் முன்
131 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பெரிதாக எதிர்பார்ப்பு வைக்கக் கூடாது. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் உங்களை காயப்படுத்தும். உங்களுடைய கடமைகளை செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். சுயநலம் இல்லாமல் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு தேவையான உதவிகளை பார்த்து பார்த்து செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இறைவழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சி எதிர்காலத்தில் நல்ல வெற்றியை கொடுக்கும். இன்று அம்பாள் வழிபாடும், சிவன் வழிபாடும் உங்களுக்கு அபரிவிதமான பலனை கொடுக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். எந்த பொருளையும் புதுசாக வாங்க வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் தேவையான அளவு ஓய்வு என்று இந்த நாள் அற்புதமான நாளாக அமையும். சிவன் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை உயர்ந்து நிற்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக் கவலை இருக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துங்கள். மூன்றாவது நபரது பேச்சை கேட்காதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் சந்தோஷத்தில் எந்த குறையும் வராது. பிள்ளைகளுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். சிவன் வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் பயம் பதட்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். காலை நேரத்தில் உங்களுடைய ஓட்டம் அதிகமாக இருக்கும். தலை மேல் நிறைய கடமைகள் வந்து நிற்கும். எந்த வேலையை செய்வது, எந்த வேலையை விடுவது என்ற குழப்பம் வரும். மாலை எல்லா பிரச்சினைகளுக்கும் இறைவன் நல்லதொரு வழியை காண்பிப்பான். நல்லது நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சிக்கல்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். சிரமங்கள் வரும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் பிரச்சினை வரலாம். இப்படி சில பல பிரச்சினைகள் உங்களை சூழ்வதற்கு வாய்ப்பு உள்ளது. இறை நம்பிக்கை உங்களை நிச்சயம் கைவிடாது. ஈசனின் பாதங்களை விடாதீர்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்கோபம் வேண்டாம். ஒரு விஷயத்தைப் பற்றி முழுசாக தெரியாமல், அந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்தவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லதே நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய நேர்மை உங்களை காப்பாற்றி விடும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் மந்தமான சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு கிடையாது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இளைஞர்கள் மாணவர்கள் இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரிய தடை…

84 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்கவைத்துக்…

153 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், என்று இந்த நாள், நல்ல அனுபவங்களை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக…

172 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 20.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள்…

173 0 0