உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மடு தேவாலய வளாகத்தில் கடற்படையினரால் புனரமைக்கப்பட்ட ஓய்வு மண்டபம் பொது மக்களின் பாவனைக்காக கையளிப்பு

இலங்கை செய்திகள் 23 நிமிடங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பிரிவின் பங்களிப்புடன் மன்னார் மடு தேவாலய வளாகத்தில் புனரமைக்கப்பட்ட ‘ஓய்வு மண்டபத்தின்’ புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, குறித்த மண்டபம் பொது மக்களின் பாவனைக்காக வியாழக்கிழமை (26) கையளிக்கப்பட்டது.

மருத மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ் .ஜே .பெப்பி சோசை அடிகளார் ஆசியுடன் , இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

வடமத்திய கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் தொழில்நுட்ப மற்றும் கைவினைப் பங்களிப்புடன், மடு தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதி மற்றும் நலனை கருத்திற்கொண்டு, இந்த ஓய்வு மண்டபம் வெற்றிகரமாகப் புனரமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் இருபது (20) நபர்கள் தங்குவதற்கான வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன, சிவில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரவி குணசிங்க, தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மாலன் பெரேரா மற்றும் இலங்கை கடற்படைக் கப்பலான பண்டுகாபய நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் அவந்திக ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் – விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின நினைவஞ்சலி!

மாவீரர் தினத்தை முன்னிட்டு, மன்னார் விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதன்போது, பங்குத்தந்தை அருட்பணி ஜெஸ்மன்…

34 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மடு, பெரியபண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மாலை மாவீரர் தின நினைவேந்தல் இடம் பெற்றது. இன்று…

37 0 0
இலங்கை செய்திகள்

பிரித்தானியாவில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு.

மாவீரர் நாள் நினைவேந்தல்கள் பிரித்தானியாவின் King’s Sutton பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. மாவீரர் நினைவாலயத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு மதியம் 12:37 மணிக்கு சுடரேற்றி…

43 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆறு முக்கிய தீர்மானங்கள்!

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் பாவனை, சமூக விரோதச் செயற்பாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்…

38 0 0