உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மலையகத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27 ஆவது சிரார்த்த தின நிகழ்வு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
80 பார்வைகள்

மலையக மக்களின் ஒப்பற்ற பெருந்தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனத் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27 ஆவது சிரார்த்த தினம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், இ.தொ.காவின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதிப் பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆரம்பத்தில் இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முதன்மைப் பங்களிப்பை வழங்கி அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

பின்னர் அது ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது முதல், தனது வாழ்நாளின் இறுதிவரை அதன் தலைவராக இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

நாட்டின் பல முக்கிய அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளை வகித்து, இலங்கை அரசியலில் மிகச் சிறந்தவொரு தேசியத் தலைவராகவும் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வட மாகாண முஸ்லிம்களின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு!  

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் 36 ஆம் ஆண்டு ‘கருப்பு ஒக்டோபர்’ நினைவேந்தல் நிகழ்வு இன்று (30) வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக…

71 0 0
இலங்கை செய்திகள்

பேரிடர்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் பொறுப்பு.!

பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி…

78 0 0
இலங்கை செய்திகள்

கடற்றொழில் துறையின் செயல்திறனை மேம்படுத்த 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்.!

இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் வள முகாமைத்துவத்தை மேலும் நிலையானதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில், கள உத்தியோகத்தர்களுக்காக 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான…

71 0 0
இலங்கை செய்திகள்

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு! : சஜித் குற்றச்சாட்டு!

அரசால் கொண்டுவரப்படவுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…

77 0 0